Tuesday, March 16, 2010

சிங்கப்பூர்!

சிங்கப்பூர்!
அயல் தேசத்து ஏழைகளின் கூடு !
சொர்க்க பூமி என்ற பெயர் உண்டு!
சிங்கப்பூரியன் எனும் உள்ளூர்வாசிகளுக்கு சகல வசதிகள் இருந்தாலும் - எங்களுக்குசொர்க்கம் என்பது தாய் நாடு தானே!
வீட்டு உறவுகளை விட்டு வந்தோம்வாழ்க்கையை அனுபவிக்க அல்ல வாங்கிய கடனை அடைக்க!!!!
கணிணி துறையில் நான் பணிபுரிந்தாலும்கட்டிட தொழிலில் ஈடுபடும் தமிழர்களை நினைப்பதுண்டு . . .
அப்பப்பா???
கண்கள் கூட குளமாகின்றனகானல் நீராம் இவ்வுலகை நினைக்கும் போது !லிட்டில் இந்தியா . . .
இது இடம் மட்டுமல்ல . . .இலட்சக்கணக்கான இந்தியர்களின்இதயங்களின் சங்கமம்!வார இறுதி நாட்களில்தான்எத்தனை நெருக்கடிஎத்தனை கருத்து பரிமாற்றங்கள்எத்தனை துக்கம்எத்தனை சந்தோஷம்ஒன்றை புரிந்து கொண்டேன் - இதுஉறவுகளின் தொகுப்பு அல்லஉணர்வுகளின் தொகுப்பு . . . இந்தியாவின் அனைத்து பொருட்களும்இங்கே கிடைக்கின்றன..
தாயின் அன்பைத் தவிர . . .
தந்தையின் அறிவுரையைத் தவிர . . .
லிட்டில் இந்தியா . . .
என்னதான் கிடைக்கும் இங்கே?
கட்டியணைக்கும் நண்பனின் ஆறுதல் கிடைக்குமா !கண்ணுக்குள்ளே சுமக்கும் காதலியின் ஸ்பரிசம் கிடைக்குமா !!கட்டியவளின் கபடமில்லா காதல் தான் கிடைக்குமா???பெற்ற தாயின் விரல் கிடைக்குமா தலை கோதி விட - இல்லைபெற்றெடுத்த குழந்தையின் மழலை குரல்தான் கிடைக்குமா !!என்ன தான் சம்பாதித்தாலும்ஏழைகள் தான் நாங்கள் . . .பணம் பையில் இருந்தாலும்மனம் வெறுமையாய் தான் !!!
ஐயோ பாவம் !!!
அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..நாங்கள் பூசிக்கொள்ளும் வாசனை திரவியம்எங்களின் செழுமையை உரைக்க அல்ல!
எங்கள் வியர்வை துளியை மறைக்க !!
கடல் தாண்டி வருவதினால் என்னவோகண்ணீரின் சுவை கூட மறத்து விட்டது !!! காத்திருக்கிறேன்!!
தாய் நாட்டில் நிரந்தரமான கால் பதிக்கும் அந்த நாளுக்காய் !!!

1 comment: